திரும்ப வந்துவிட்டது 'வாட்ஸ் ஆப் கோல்ட்' புரளி..!!

share on:
Classic

தன்னை டவுன்லோட் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு பல பிரிமியம் சேவைகளை வழங்குவதாக சொல்லி தகவல்களை திருடும் இந்த ' வாட்ஸ்ஆப் கோல்ட் மெசேஜ்' திரும்பவும் மக்களிடம் வேகமாக பரவி வருகிறது. 

வேகமாக பரவும் புரளி:
புதிதாக பரவி வரும் ஒரு  வாட்ஸ்ஆப் புரளியை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது சம்மந்தமான மெசேஜ் ஒன்று எப்போது வைரலாக பரவி வருகிறது. அதில் கூறியிருப்பது "நாளைமுதல் வாட்ஸ்ஆப்பில் 'வாட்சாப் கோல்ட்' என்று ஒரு வீடியோ உங்களுக்கு காண்பிக்கப்படும். 'மார்டினெல்லி' என்று பெயர் கொண்ட அதனை தயவுசெய்து டவுன்லோட் செய்ய வேண்டாம். அப்படி ஒரு முறை இதில் மாட்டிக்கொண்டால் தப்பிக்கவே முடியாது. இந்த முக்கிய செய்தியை வேகமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் "என்று அந்த மெசேஜ் கூறுகிறது.

டவுன்லோட் செய்தால் என்ன ஆகும் :
இதை ஒருவர் தவறுதலாக டவுன்லோட் செய்தால், அதன் மூலம் அவர்கள் மொபைலிற்குள் வைரஸை புகுத்தி  மெசேஜ் உட்பட பல முக்கிய விவரங்களை திருடுவதே இதன் நோக்கம். 2016 ஆம் ஆண்டு மக்களிடம் பெரிய அச்சத்தை உருவாக்கிய இந்த புரளி திரும்பவும் அடுத்த ரவுண்டிற்கு ரெடியாகி உள்ளது. 

வாட்ஸ்ஆப் நிறுவனம் என்ன சொல்கிறது :
உண்மையில் 'மார்டினெல்லி' என்று ஒன்று நிஜத்தில் இல்லைவே இல்லை என்று பலரும் கூறு, இதை குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனமோ "இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே போல் 'வாட்ஸ்ஆப் ப்ளஸிற்கும்' எங்களுக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறோம்" என்று சொல்லி முடித்தது. ஆனால் இதையெல்லாம் காதில் போட்டு கொள்ளாமல் பீதியடைந்த பலர் இதை குறித்து  வேகமாக பரப்பி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind