உலக கோப்பை ஹாக்கி போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை பந்தாடியது அர்ஜென்டினா

share on:
Classic

உலக கோப்பை ஹாக்கி போட்டியில்  லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் 14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றுவருகிறது. 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இது அந்த அணியில் 2-வது வெற்றியாகும்.

இதன் மூலம் அர்ஜென்டினா அணி நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

sasikanth