“மணிகர்ணிகா படத்தை நாங்கள் எதிர்க்கவில்லை” - கர்ணிசேனா அமைப்பு தகவல்

share on:
Classic

மணிகர்ணிகா படத்திற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என்று கர்ணி சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் பிரபலமான கர்ணி சேனா அமைப்பு தற்போது ராணி லக்‌ஷ்மி பாய்-இன் வாழ்க்கை வரலாற்று படமான மணிகர்ணிகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மணிகர்ணிகா படத்தை தாங்கள் எதிர்க்கவில்லை என்று கர்ணிசேனா அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஹிமன்ஷு தெரிவித்துள்ளார்.

“நாங்கள் மணிகர்ணிகா படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அவ்வாறு வெளியாகும் செய்திகள் தவறானவை, கர்ணி சேனா பெயரை பயன்படுத்தி சிலர் தங்கள் சொந்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கர்ணி சேனா பெயரால் போராட்டங்கள் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது” என்று கூறினார். இதேபோல பத்மாவதி பட விவகாரத்திலும் தங்கள் பெயரை பயன்படுத்தி சிலர் போராட்டம் நடத்தி, தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகவும் அந்த அமைப்பினர் கூறி உள்ளனர்.

ராணி லக்‌ஷ்மி பாய் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள மணிகர்ணிகா படம் வரும் 25-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது. “படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெற்ற பிறகும் கர்ணிசெனா அமைப்பினர் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர். என்னை தொந்தரவு செய்வதை நிறுத்தாவிட்டால், நானும் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவள் தான், நான் அவர்களை அழித்து விடுவேன்” என்று கங்கனா ரனாவத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

aravind