அமெரிக்கர்களை நம்பாதது போல், ஐரோப்பியர்களையும் நம்பக்கூடாது : ஈரான் தலைவர் எச்சரிக்கை

Classic

அமெரிக்கர்களை நம்பாதது போல் ஐரோப்பியர்களையும் நாம் நம்பக்கூடாது என்று ஈரானின் மூத்த மதத்தலைவர்  காமெனி தெரிவித்துள்ளார்.

ஈரானில் நடந்த அரசு விழா ஒன்றில் அந்நாட்டு மூத்த மத தலைவர் அயத்துல்ல அலி காமெனி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “அமெரிக்காவுக்கு இனி நன்மையே கிடையாது. அமெரிக்கர்களைப் போல் நாம் ஐரோப்பியர்களையும் நம்பக்கூடாது. நாங்கள் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. இருப்பினும் அவர்களிடம் நம்பகத்தனமை இல்லை என்று தான் கூறுகிறோம்”என தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் எனவும், அந்த ஒப்பந்தம் முட்டாள்த்தனமானது என்றும் விமர்சித்து வந்தார். இதனிடையே, ஈரானுடனான ஒப்பந்தித்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவளித்தன. இதனைத்தொடர்ந்து ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

News Counter: 
100
Loading...

Ramya