வெளிநாட்டு படைகள் வெளியேறும் வரை அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை - ஆப்கன் தாலிபான்கள்

share on:
Classic

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், வெளிநாட்டு படைகள் வெளியேறும் வரை அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை என்று தாலிபான் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து தாலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஜல்மாய் கலீல்ஜாத்துடன் தாலிபான் அரசியல் தலைவர் ஷெர் முகமது அப்பாஸ் தலைமையில் கடந்த சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஷெர் முகமது அப்பாஸ் நேர்காணல் ஒன்றில் பேசிய போது, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேற வேண்டும் எனவும் அதுவரை தாலிபான்களுக்கு அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார் மேலும் அமைதியை ஏற்படுத்துவது என்பது போரை விட சிக்கலானதாக இருப்பதாகவும், இறுதியாக இதற்கு என்று கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் அரசுப்படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்படை அங்கு முகாமிட்டுள்ள நிலையில், அமெரிக்க படை வெளியேற வேண்டும் என்று நோக்கத்துடனே தாலிபான்கள் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

News Counter: 
100
Loading...

Ramya