தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெறுவோம் - டிடிவி நம்பிக்கை..!!

share on:
Classic

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று அடையாறில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தமிழக மக்கள் தலைநிமிர வேண்டும், தங்களது வாழ்வு செழிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஆட்சி மாற்றத்துக்காக ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தெரிவித்தார்.

தமிழகம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக இளைஞர்கள், பெரியவர்கள், மற்றும் தாய்மார்கள் பரிசு பெட்டக சின்னத்தில் அமமுக-விற்கு வாக்களித்து பெரிய புரட்சியை ஏற்படுத்த போகிறார்கள் என்றார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan