"பாக். மண்ணிலிருந்து அனுமதிக்க மாட்டோம்" இம்ரான் கான் ஆவேசம்..!

share on:
Classic

பாகிஸ்தான் மண்ணிலிருந்து தீவிரவாதத் தாக்குதலை நடத்த அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள்  மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மற்றும் சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. 

இதனைத் தொடர்ந்து, மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹிபீஸ் சயீது தலைமையிலான ஜமாத் உத் தவா மற்றும் அந்த இயக்கத்திற்கு சொந்தமான ஃபலா-இ-இன்சானியாத் பவுண்டேசன் ஆகியவற்றுக்கு, பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் மண்ணிலிருந்து எந்தஒரு தீவிரவாத இயக்கமும், பயங்கரவாதத் தாக்குதலை நடத்த அனுமதிக்க மாட்டோம் என இம்ரான் கான் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

sajeev