உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா..? இனி கவலை வேண்டாம்..!!

share on:
Classic

”அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழிக்கேற்ப  நாம் அளவுக்கு அதிகமான உணவுகளை உட்கொள்வதால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று தான் உடல் பருமன்.

இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டில் உலக அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தவர்களில் உடல் பருமனாக இருந்தவர்கள்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது என்று வருந்துகிறது உலகச் சுகாதார நிறுவனம்.

உடல் பருமனுக்கான காரணங்கள்:
உடலுக்கு எந்த ஒரு அசைவும் கொடுக்காமல் உடற்பயிற்ச்சியும் செய்யாமல் அதிக அளவு உணவுகளை எடுத்துக்கொள்ளுதல். இனிப்புகள், ஐஸ்கீரிம், குளிர்பானங்கள், மதுப்பழக்கம் போன்றவற்றால் உடல் பருமன் அதிகம் ஏற்படுகிறது. தைராய்டு சுரப்பி குறைவதாலும் அட்ரீனஸ் சுரப்பி அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும்.

உடல் பருமனால் ஏற்படும் விளைவுகள்:
உடல் பருமனால் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மூட்டு வழி, மனஅழுத்தம், மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், பித்தப்பைக் கற்கள், குடலிறக்கம், குறட்டை, ‘ஸ்லீப் ஏப்னியா’ எனும் உறக்கச் சுவாசத் தடை, மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, மாதவிலக்குப் பிரச்சினைகள், சினைப்பை நீர்க்கட்டி, மூலநோய், மனச்சோர்வு போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன.

உடல்பருமனை குறைக்க வழிகள்:

  • உணவுகளை அளவோடு உட்கொள்வதோடு சரியான நேரத்தில் உடற்பயிற்ச்சியை செய்ய வேண்டும். 
  • பீசா, பர்கர், சான்வெஜ், சாக்லெட்டுகள், நொறுக்கு தீணிகள் மற்றும் மாமிசம் போன்ற அதிக கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • இஞ்சியை தோல் சீவி அரைத்து ஒரு டேபுள் ஸ்பூன் சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம்சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சல், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்து பொடியாக்கி காலை மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலில் கொழுப்பு குறைந்து எடையும் குறையும்.

     

News Counter: 
100
Loading...

aravind