மேற்குவங்க மாநிலம் மினி பாகிஸ்தானாக மாறி வருகிறது : ஜேடியூ தலைவர் கருத்து

share on:
Classic

மம்மா பானர்ஜியின் ஆட்சியின் கீழ் மேற்குவங்க மாநிலம் மினி பாகிஸ்தானாக மாறி வருகிறது என்று ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக போவதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மேலும் டெல்லி, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப் போட்டியிட போவதாகவும் அவர் அறிவித்தார். நிதிஷ் குமாரின் இந்த கருத்துக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் அலோக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ மேற்குவங்கத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளன. நான் இதனை நீண்ட காலமாகவே கூறி வருகிறேன். எங்கள் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு, மம்தா ஏன் நன்றி தெரிவித்தார் என்று எனக்கு புரியவில்லை. ஒருவேளை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி, 4 மாநில தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது மம்தாவிற்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், அவரது மாநிலம் மினி பாகிஸ்தானாக மாறி வருவதை அவர் தடுக்க வேண்டும். மேற்குவங்கத்தில் வசிக்கும் பீகார் மக்கள் தாக்கப்பட்டதையும், அவர்கள் வெளியேற்றப்பட்டதையும் எங்களால் மறக்க முடியாது” என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya