வெஸ்ட் இண்டீஸ் அணி இவ்வளவு கம்மியா ஸ்கோர் பண்ணிருக்காங்க.... வெற்றி பெற சான்ஸ் இருக்கா..?

share on:
Classic

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், 212 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வெஸ்ட் இண்டீஸ்

ரோஸ் பவுல் மைதானத்தில் இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் சேர்த்து தனது ஆட்டத்தை நிறைவு செய்தது. அணியில் அதிக பட்சமாக நிக்கோலஸ் பூரன் 63 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

News Counter: 
100
Loading...

Saravanan