அதிமுக 37 எம்.பி.க்களால் என்ன பயன்..? ஸ்டாலின் கேள்வி..!

share on:
Classic

பாஜகவின் தேர்தல் அறிக்கை முரண்பாட்டின் மொத்த வடிவம் என திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் விமர்சித்தார்.

திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையையும், திராவிட இயக்கத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் சுட்டிக்காட்டிய பேசிய அவர், அதிமுக-பாஜக-பாமக தேர்தல் அறிக்கைகள் முரண்பாடுகளின் மொத்த உருவம் என விமர்சித்தார். 

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக 37 எம்.பி.க்களை பெற்றதால் தமிழகத்திற்கு என்ன பயன் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். காது ஜவ்வு கிழிந்துவிடும் என்று முதலமைச்சர் பேசுவதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கையே கிழியப் போகிறது என்றும் திமுக தலைவர் கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravind