வாக்கு பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன..!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைதேர்தலில் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்...

தமிழகத்தின் 38 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனையடுத்து வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்கு பதிவு மையத்துக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், அரசு நிறுவனங்களின் புகைப்பட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், பான் கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, 100 நாள் வேலைத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு சென்று தங்களது வாக்கை பதிவு செய்யலாம்.

News Counter: 
100
Loading...

Ragavan