டெங்கு காய்ச்சல் என்றால் என்ன ? எப்படி பரவுகிறது ? எப்படி பரவாது ? 

Classic

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன ? 

டெங்கு எனப்படும் வைரஸ் கிருமியால் பரவும் காய்ச்சல் தான் டெங்கு காய்ச்சல். 

எப்படி பரவுகிறது?

டயர், பயன்படுத்தாத உடைந்த சிமெண்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தொட்டிகள், போன்றவற்றில் தேங்கும் நீரில் உருவாகும் ஏ.டி.எஸ் கொசுக்கள் டெங்கு வைரசுடன் உருவாகிறது. இந்த கொசுக்கள் கடிக்கும் போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகின்றது. 

டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏ.டி.எஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும் போது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகின்றது. 

ஏ.டி.எஸ் கொசு 3 வாரங்கள் உயிர் வாழும். இந்த 3 வார காலத்தில் ஒரு கொசு நல்ல நீரில் நூற்றுக்கணக்கான முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் செய்கிறது. இவ்வாறு குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உருவாகின்றன.

ஏ.டி.ஸ் கொசு பட்டப்பகலில் தந்திரமாக மனிதர்களை கடிக்கும் தன்மை கொண்டது. 

எப்படி பரவாது ? : 

காற்று, தண்ணீர் , எச்சில், இருமல் , தும்மல், மற்றும் தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது.

News Counter: 
100
Loading...

sankaravadivu