தளபதி 63 படத்தின் அடுத்த அப்டேட் என்ன தெரியுமா?..

share on:
Classic

விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 63 படத்திற்கு பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் - அட்லி வெற்றி கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தளபதி 63 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விஜய்யுடன் ஜோடி சேர்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் கதிர், விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. இந்த படத்தை பற்றி தினசரி அப்டேட்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படத்தின் பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் - விவேக் கூட்டணியில் வெளிவந்த மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து தளபதி 63 படத்திலும் இந்த கூட்டணி தொடர்வதால், விஜய் ரசிகர்களிடையே பாடல்கள் குறித்த எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகமாகி உள்ளது. 

தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

Ramya