2019ல் மொபைல், டிவி வாங்க போறீங்களா? கவலைய விடுங்க.. இதை படிங்க..!

share on:
Classic

சமீப காலமாக வெற்றிகராமாக வளர்ந்து வரும் பிராண்டுகளில் ஒன்றுதான் இந்த Xioami (Mi). டிவி, மொபைல் போன் போன்ற பல்வேறு வகையான பொருள்களை மலிவான விலைக்கு கொடுத்து சீனா தொழில் நுட்ப உலகில் iF Awards எனும் 13 வகையான அவார்டுகளை அள்ளிச்சென்று இப்போது மொபைல் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடமும், உலக அளவில் ஐந்தாவது இடமும் பெற்று தொழில் நுட்ப உலகில் முன்னணி நிறுவனமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

2019-ல் சியோமி என்னென்ன பொருட்களை வெளியிடுகிறது தெரியுமா? 

இன்றைய நவீன உலகில் யாரிடம் தான் மொபைல் போன் இல்லை. 6 முதல் 60 வரையிலான வயதுடையவர்களின் மூன்றாவது கையாக செயல்படுவது மொபைல் போன் தான். உலகில் மொபைல் மோகம் யாருக்கு தான் இல்லை, அந்த வகையில் மொபைல் பிரியர்களுக்கு விருந்தளிக்க Mi நிறுவனம் புதிய பொருள்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Redmi 7, Mi Band 4 மற்றும் இல்லத்தரசிகளை கவர Mi LED TV 5, மற்றும் பல பலே திட்டத்துடன் பொருட்களை 2019-ல் mi நிறுவனம் வெளியிடுகிறது.

Mi LED TV 5 : 

இந்தியாவில் முதலில் Mi LED TV 4 மாடலை களமிறக்கி அதில் மிகபெரிய வெற்றியை அடைந்த Mi நிறுவனம், அடுத்த படியாக Mi LED TV 5 மாடலை விரைவில் சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

Mi LED TV 5 மாடலுடன் முதன் முறையாக L65M5-5A and L65M5-5S என்னும் இரண்டு மாடலை வெளியிட உள்ளது. 3C அறிக்கையில் இந்த மாடலின் புதிய அம்சங்களை வெளியிடவில்லை என்றாலும் அதன் டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தில் மெருகேற்றம் இருக்கும் என்பதை நம்புவோம்.

Redmi 7, 7A and 7 Pro :

Redmi 7 சீரிஸ் இந்த வருடம் ஜூன் மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 5.84'' இன்ச் டிஸ்பிலே, 1080p reolution உடன் ஓர் புதிய டிசைனுடன் அறிமுகமாக உள்ளது. பழைய மாடலை போல டூயல் கேமரா மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் போன்ற அம்சங்களில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Mi Band 4 :

Mi band 3 மாடல் இப்போது விலை மலிவான அதிக அம்சங்களுடன் திரை மெருகேற்றப்பட்டு அடுத்த மாடலை வெளியிட தயாராகி கொண்டிருக்கிறது. Honor நிறுவனம் Honor band 4 மாடலை OLED திரையுடன் வெளியிட்டுள்ளது. எது எப்படியோ Honor Mi-யின் அம்சங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் விலை மலிவா எது கிடைக்குமோ அதை தான நாம வாங்குவோம்..!

News Counter: 
100
Loading...

youtube