லட்சத் தீவுக்கு போக தகுந்த சீசன் எதுனு தெரியுமா?

share on:
Classic

பரபரப்பான மெக்கானிக் உலகில் இருந்து ஒரு ஆழ்ந்த, அமைதியான, அம்சமான ஒரு இடத்திற்கு சென்று பொழுதைக் கழிக்க வேண்டும் என்பது பொதுவாக அனைவருக்குமே உள்ள ஒரு நிலைப்பாடு. ஆனால், அதற்கு நதி மூலம், ரிஷி மூலம்னு பார்த்து பார்த்து பெரும்பாலானோர் வீணடிக்கிறார்கள்.

ஆண்டுக்கு ஒரு முறை குடும்பத்தோடு சுற்றுலா செல்வது ஒரு இன்பம் என்றால், அது இயற்கையோடு இயைந்த ஒரு பகுதிக்கு சென்று வருவது அதை விட அலாதியானது. அதுப்போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்க வல்லது இந்தியாவின் லட்சத்தீவு. இந்த லட்சத்தீவுக்கு எப்படி செல்வது எனத் தெரியாமல் திணறுபவர்களுக்கான வழிகாட்டுதலைக் காணலாம்.

அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த லட்சத்தீவுக்கான பயணத்தை தொடங்கவேண்டும் என்றால் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் மங்களூர், பெங்களூர் மற்றும் சேர நாடான கேரளத்தின் கொச்சி, கோழிக்கோட்டிலிருந்து புறப்பட வேண்டும். வான் மற்றும் கடல் வழித்தடங்களில் மட்டுமே லட்சத்தீவை சென்றடைய முடியும். இப்போ, கேரளாவில் இருந்து எப்படி செல்லாம் என பார்ப்போம்.

லட்சத்தீவு சமுத்திரம் என்னும் 5 நாள் மட்டுமே செல்லக்கூடிய ஒரு கப்பல் வழிப்பயணமாகும். இதில் 180 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். லட்சத்தீவின் கவரத்தி, கல்பேனி, மினிக்காய் ஆகிய தீவுகளுக்கு செல்வதற்காக இந்தக் கப்பல், கேரளாவின் கொச்சியிலிருந்து, பயணிக்க தொடங்கும். 

ரயில் பயணத்தில் உள்ளது போன்று, கப்பலிலும் முதல்,2ம் வகுப்பு மற்றும் டைமண்ட், கோல்ட் என தனித்தனியே கட்டணத்திற்கு ஏற்றவாறு வசதிகளும் கொடுக்கப்படுகிறது. இந்த சமுத்திரம் கப்பல் பருவமழைக் காலங்களான ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படாது. சீசன் மாதங்களான செப்டம்பர் - மே வரையே இயக்கப்படும். அதிலும் டிசம்பர் மாதத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் கூடுதலாக 10% கட்டணமும், 5% ஜி.எஸ்.டியும் வசூலிக்கப்படும். இந்த கட்டணங்கள் அனைத்து லட்சத்தீவு சுற்றுலாத்துறை நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த கப்பல் பயணத்தின் மூலம் சுற்றுலா பயணிகள் சிறந்த அனுபவத்தை உணர முடியும். ஸ்கூபா டைவிங், ஸ்நோர்க்ளிங், நீச்சல் போன்ற பல ரைடுகள் செல்லலாம். 
கவரத்தியில் உள்ள டால்ஃபின் டைவ் மையத்தில், ஸ்கூபா டைவிங் செய்ய மட்டும் ரூ.2,000 தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். 

லட்சத்தீவுகளுக்குள் செல்ல டூரிஸ்ட் பெர்மிட்கள் ஏதும் தேவையில்லை. போர்டிங் பாஸ் மட்டும் போதுமானது. கப்பல் பயணத்திற்காக தேவையான அடையாள அட்டைகளான ஆதார், முகவரி,  தொலைப்பேசி எண் போன்றவை முக்கியம். பயணத்தின்போது, சைவம், அசைவ உணவுகள் போன்ற சகல வசதிகளும் வழங்கப்படுகிறது. 

பயண கட்டண விவரம்: 

 

பேக்கேஜ் விவரங்கள்:

மேலதிக விவரங்களை அறிந்துக்கொள்ள: 

News Counter: 
100
Loading...

janani