வாட்ஸ் ஆப்பில் இனி பணப்பரிமாற்றம் செய்யலாம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புவாட்ஸ் ஆப்பில் இனி பணப்பரிமாற்றம் செய்யலாம்

வாட்ஸ் ஆப்பில் இனி பணப்பரிமாற்றம் செய்யலாம்

வாட்ஸ் ஆப்பில் இனி பணப்பரிமாற்றம் செய்யலாம்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ் ஆப்பில் பணபரிமாற்றம் செய்யும் வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பேடியம் (Paytm) , போன்-பே (Phone Pe), பிம் (BHIM) போன்ற பல பணபரிமாற்ற செயலிகள் உள்ளது. வாட்ஸ் ஆப் இந்திய மக்களிடையே பிரபலமான செயலியாக உள்ளதால் இந்த பணபரிமாற்ற சேவை மக்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் UPI pin மூலமாக ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பணம் அனுப்ப முடியும். வாட்ஸ் ஆப் வெர்சன் 2.18.46 -லிருந்து தான் இந்தப் பணிபரிமாற்றத்தை உபயோகிக்க முடியும். வங்கி கணக்கில் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணும் வாட்ஸ் ஆப் எண்ணும் ஒன்றாக இருந்தால் தான் இந்தச் சேவையை உபயோகப்படுத்த முடியும். தற்போது , ஆண்டராய்டு கைப்பேசிகளுக்கு மட்டுமே இந்தச் சேவை அறிமுகப்படுத்துள்ளது. விரைவில் ios கைப்பேசிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.