இதுவரை தேர்தல் களத்தை சந்திக்காத ரஜினிகாந்த்..! கால் நூற்றாண்டாக காத்திருக்கும் ரசிகர்கள்..!!

share on:
Classic

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெளியிட்டாலும், இதுவரை தேர்தல் களத்தை அவர் சந்திக்கவில்லை. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்ப்போம்....!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு, அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் திறந்த இரும்புக் கதவுகள், தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களில் குடியமர்த்தியது. யாராலும் தொட்டு விடமுடியாத சொர்க்க வாசலுக்கு அழைத்துச் சென்றது. நடித்த அனைத்து படங்களில் வெற்றிக் கொடி. அவர் படங்கள் வெளியாகும் திரையரங்களில் மின்னல், இடி.

70, 80, 90-கால கட்டங்கள், ரஜினியின் பொற்காலம். சூப்பர் ஸ்டாரின் படங்கள் வெளியாகும் நாளன்றுதான் ரசிகர்களுக்கு விழாக்கோலம். ஆண்டுக்காண்டு, நாளுக்கு நாள், நொடிக்கு நொடியென கோடான கோடியாய் குவிந்தது ரசிகர்கள் பட்டாளம். அவர்கள் வைத்த கட்அவுட்களின் எண்ணிக்கை ஏராளம்.

சினிமாவைக் கடந்து, அரசியலிலும் அவரை அழகு பார்க்க துடித்தது ரசிகர்கள் கூட்டம். எப்போது வேண்டுமானாலும் அரசியலில் களம் காணுவார் என்று காத்திருந்த காலம் கட்டம். கடந்தது காலம் மட்டும் தான். காத்திருந்த ரசிகர்களிடையே நரை மட்டுமே வசித்துப் போனது. ரஜினிகாந்த் அளித்தது கால்நூற்றாண்டு ஏமாற்றம்.

எதிர்பார்ப்புகள் குறைந்து, பல ரசிகர்களை வயதோகிதம் அழைத்துச் சென்ற போது தான், ரஜினி காந்த் அரசியல் பக்கம் பிரவேசித்தார். இரண்டாளுமைகளான முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும், திமுக தலைவர் கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கிய பிறகு தான் வெளியானது அந்த அறிவிப்பு..

நான் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினி அறிவித்தது எத்தனை ஆண்டுகால தவம்...! ஆனாலும், கட்சியின் பெயரை அறிவிக்கக் கூட தாமதம். நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என ரஜினிகாந்த் அறிவித்தாலும், இதுவரை மக்கள் பிரச்சினைக்காக அவர் குரல் ஒலிக்கவில்லை. சீர்கெட்டு போன ஜனநாயத்தை சரிகட்ட, முறையான அரசியலை முன்னெடுப்பதாக ரஜினிகாந்த் கூறி வந்தாலும், அதில் ஒரு அடி கூட முன்னேறவில்லை. மறுபடியும் திரையில் மட்டுமே மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் என்ற போருக்குத் தயாராக 'தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் தான் வேண்டும்' என ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டாலும், அதே அம்பு ரஜினிகாந்த் என்ற வருங்கால அரசியல் தலைவரையும் எதிர் நோக்கி இருக்கிறது.

News Counter: 
100
Loading...

Ragavan