அமெரிக்காவின் சிறந்த நிறுவனம் எது...சூடான பட்டியல் ரெடி.!

share on:
Classic

அமெரிக்காவில் இயங்கிவரும் நிறுவனங்களில் சிறந்த நிறுவனம் எது என்ற பட்டியலை கிளாஸ்டோர்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

கிளாஸ்டோர்ஸ் பட்டியல்

கிளாஸ்டோர்ஸ் பட்டியல் என்பது உலகில் மிகவும் மதிக்கப்பட கூடிய பட்டியல் ஆகும்.  இந்நிறுவனம் தற்போது, அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் 2018-ல் எப்படி செயல்பட்டது, பணியாளர்களை எப்படி நடத்துகிறது,  நிறுவனர் மற்றும் பணியாளர்களுக்கு இடையேயான உறவு எப்படி உள்ளது என்ற விஷயங்களை வைத்து சிறந்த நிறுவனம் எது என்ற பட்டியலை எடுத்துள்ள இந்நிறுவனம், இவற்றையெல்லாம் வைத்து வைத்து அடுத்த ஆண்டிற்கான சிறந்த நிறுவனம் எது என்பதை தெரிவித்துள்ளது. சுமார் 100 நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 
 

முதல் இடத்தில் பெய்ன் அண்ட் கோ

கிளாஸ்டோர்ஸ் பட்டியலில் முதல் இடம் பிடித்திருப்பது அமெரிக்காவின் பொருளாதார ஆலோசனை நிறுவனமான பெய்ன் அண்ட் கோ. அந்நிறுவனம்  5க்கு 4.6 மதிப்பெண் பெற்றுள்ளது. 

 

பேஸ்புக்

இந்த பட்டியலில் கடந்த முறை முதல் இடத்தில் இருந்த பேஸ்புக் நிறுவனம் இந்த முறை 5 மதிப்பெண்ணுக்கு 4.5 மதிப்பெண் எடுத்து பேஸ்புக் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.  இந்த முறை 7 வது இடத்திற்கு  தள்ளப்பட்டதிற்கு காரணம் இந்த ஆண்டு ஏற்பட்ட பயனாளர்கள் திருட்டு பிரச்சனையேயாகும். இதனால் தான் அதன் புள்ளிகள் சரிந்து வீழ்ச்சி அடைந்தது.

 

இடம்பெறாத அமேசான்

லின்க்டின் நிறுவனம் 6வது இடத்திலும், ஆப்பிள் நிறுவனம் 71வது இடத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் 34 வது இடத்திலும் உள்ளது.  பெரிய நிறுவனமான அமேசான் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

 

 

News Counter: 
100
Loading...

aravind