நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவோர் யார் யார்..?

share on:
Classic

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி சார்பிலும், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பிலும் யார் யார்? போட்டியிடுகிறார்கள் என்ற விவரங்களை இப்போது பார்க்கலாம்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் சார்பில் பாண்டவர் அணியும், இயக்குநர் பாக்யராஜ் சார்பில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறது. தற்போதைய நடிகர் சங்கத் தலைவரான நாசர், பாண்டவர் அணி சார்பில் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதேபோல், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் மீண்டும் அதே பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர்களாக கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

பாண்டவர் அணியை எதிர்த்து களமிறங்கும் சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பாக்யராஜ் நிறுத்தப்பட்டுள்ளார். பொதுச் செயலாளராக ஐசரி கணேஷ், பொருளாளராக பிரசாந்த் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். துணைத் தலைவர்களாக குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக 24 செயற்குழு உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில், பாண்டவர் அணி சார்பில் சிபிராஜ், பிரசன்னா, பசுபதி, ராஜேஷ், சரவணன், மனோ பாலா, குஷ்பு, கோவை சரளா, சோனியா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதேபோல், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பூர்ணிமா பாக்யராஜ், காயத்ரி ரகுராம், ஆர்த்தி கணேஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan