IPL : இறுதிப் போட்டியில் களமிறங்கப்போவது யார்..?

share on:
Classic

ஐபிஎல் தொடரின் 2-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது. 

முதல் தகுதி சுற்றுப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய மும்பை இண்டியன்ஸ் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. இந்நிலையில், எலிமினேட்டர் சுற்றில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி தோல்வியடைந்து வெளியேற, வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. 

விசாகப்பட்டினத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியுடன் கோப்பைக்கான பலப்பரீட்சை நடத்தும்.

 

News Counter: 
100
Loading...

aravind