தொடரை வெல்லப்போவது யார்.? இன்று பலப்பரீட்சை..!

share on:
Classic

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, முதலில் நடந்த டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றன. இதில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2க்கு 2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 

இந்நிலையில், தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. ஐசிசி உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுவென்பதால், இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் கோஹ்லி தலைமையிலான அணி களமிறங்குகிறது.

 

News Counter: 
100
Loading...

sajeev