ஒரு நாள் தொடரை வெல்லப்போவது யார்..?

share on:
Classic

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதல் இரு போட்டிகளில் இந்தியாவும், கடைசி இரு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றிபெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது. கடந்த ஆட்டத்தில் 358 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை அளித்துள்ளது. இதனால், தொடரை கைப்பற்ற,  நாளைய போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. 

அதேநேரம், அடுத்தடுத்த வெற்றிகளால் உத்வேகம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா, ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சொந்த மண்ணில் இந்தியாவிடம் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்க தயாராகி வருகிறது. உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா பங்கேற்றுள்ள கடைசி தொடர் இதுவென்பதால், நாளைய போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோலி அணி முத்திரைப் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

sajeev