அடுத்த பாஜக தலைவர் யார்..?

share on:
Classic

தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் பல முன்னணி தலைவர்கள் வரிசையில் உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் தலைவராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பதவி காலியாக உள்ளது. அப்பதவிக்கான பந்தயத்தில் பல்வேறு தலைவர்கள் முன்னணியில் உள்ளனர். நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், ஆர். ஸ்ரீனிவாசன், கே.எஸ். நரேந்திரன் ஆகியோர் போட்டியில் உள்ளனர். அதில் நயினார் நாகேந்திரனுக்கு தலைவராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவின் புதிய தேசிய பொதுச் செயலாளரான பி.எல். சந்தோஷ் அவரின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நெருக்கமானவராக கருதப்படும் வானதி ஸ்ரீனிவாசனும் தலைவர் போட்டியில் உள்ளார். எனினும் தமிழிசை சவுந்தரராஜன் கே.எஸ் நரேந்திரனை பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிகிறது.

தமிழக பாஜக தலைவராவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நயினார் நாகேந்திரன் கடந்த 2017-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். முன்னாள் அமைச்சரான அவர், அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர்இந்தியன் யூனியன் லீக் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். 

 

News Counter: 
100
Loading...

Ramya