இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் : மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது என்று பாகிஸ்தான் மக்கள் கூற காரணம்..?

share on:
Classic

நாட்டின் புதிய பிரதமராக போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், மோடி மீண்டும் பிரதமராக கூடாது என்று பாகிஸ்தான் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாகவே அமைந்தன. பெரும்பாலான முடிவுகள் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தன. இவை தவறான மற்றும் பொய்யான கருத்துக்கணிப்பு முடிவுகள் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. கருத்துக்கணிப்பு முடிவுகள் எந்தளவுக்கு உண்மையாக இருந்தது என்று நாளை தெரிந்துவிடும். 

அடுத்து ஆட்சியமைக்கப்போவது யார், பிரதமராகப் போவது யார் என்று நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தான் மக்களும் அதனை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளனர். இந்தியாவின் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து பாகிஸ்தான் மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மோடி பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவதால், அவர் மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்று லாகூரை செர்ந்த ஷாகி அலாம் பாகிஸ்தான் சேனலில் தெரிவித்தார். மோடி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாது என்று தான் நம்புவதாகவும், அது தான் பாகிஸ்தானுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் அய்சாஸ் என்ற் நபர் தெரிவித்துள்ளார். 

முன்னாதாக கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசிய போது,  2019 பொதுத்தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமரானால், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya