அடுத்த பிரதமர் யார்..? டிவிட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகும் #GobackModi ஹாஷ்டாக்..

share on:
Classic

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் இன்று கிடைக்க உள்ள நிலையில், டிவிட்டார் என்ற ஹேஷ்டாக் டிரண்டாகி வருகிறது. 

நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக கடந்த மே 19 வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூரை தவிர்த்து 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில், டிவிட்டரில் என்ற ஹேஷ்டாக் டிரண்டாகி வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு வெளியான பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார், எந்த கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்ற முடிவு இன்று வெளியாகிவிடும். ஆனால்  அது தெரிவதற்கு முன்னரே மோடிக்கு எதிரான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் மீம்களை வைத்து பாஜக, மோடியை கிண்டல் செய்து வருகின்றனர். விஜய் மல்லயா, லலித் மோடி, நீரவ் மோடி உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்களின் புகைப்படங்களை பதிவிட்டும் வருகின்றனர். இன்றைய தினம் நல்லது நடக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மீண்டும் மோடியை கையாள முடியாது எனவும், ஒருவேளை மீண்டும் மோடி வந்தால் அது இந்தியாவிற்கு முடிவாக இருக்கும் என்ற கருத்துகளும் பரவி வருகின்றன. இதுவரை எந்த பிரதமருக்கும் கிடைக்காத வெறுப்பு மோடிக்கு கிடைத்துள்ளது எனவும், இது போல் மேலும் ஒருமுறை நடக்க கூடாது என்பன போன்ற கருத்துக்களும் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகின்றன.

 

 

 

 

 

News Counter: 
100
Loading...

Ramya