மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வராதது ஏன்..?  தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..!

share on:
Classic

25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வராதது பாதிக்கப்பட்டோருக்கான நீதியை மறுப்பதற்குச் சமம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது

சாலை விபத்தில் தேனியைச் சேர்ந்த 6 மாத கர்ப்பிணி புஷ்பா உயிரிழந்தது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் இன்று விசாரணை வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மோட்டார் வாகன சட்டம் 25 ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை சட்டத்தில் திருத்தம் கொண்டு வராதது, பாதிக்கப்பட்டோருக்கான நீதியை மறுப்பதாகும் என்றார்.

மோட்டார் வாகன சட்டத்தின் இழப்பீடு வழங்கும் பிரிவுகள் ஒவ்வொரு 3 அல்லது 5 ஆண்டுக்கு ஒருமுறை முறையாக திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, பலியான பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை 20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 

News Counter: 
100
Loading...

aravind