இறந்தவர்களின் உடலை தங்கள் வீடுகளிலேயே புதைக்கும் முஸ்லீம்கள்.. காரணம்..?

share on:
Classic

இறந்தவர்களை புதைக்க நிலம் இல்லாததால், உத்திரப் பிரதேசத்தில் உள்ள கிராம மக்கள் தங்கள் வீட்டிலேயே புதைக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சாபோக்ரா என்ற பகுதியில் கணிசமான முஸ்லீம்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகளாகவும், நிலமற்றவர்களாகவும் உள்ளனர். அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இறந்து போனவர்களை புதைக்க நிலம் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, இறந்துபோன தங்கள் உறவினர்களின் உடல்களை அவர்கள் தங்கள் வீடுகளிலிலேயே புதைத்து வருகின்றனர். 

அங்கு வசிக்கும் ரிங்கி பேகம் என்பவர் கூறிய போது “ எங்கள் வீட்டின் பின்புறத்தில் 5 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. காய்ச்சலுகு சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்த தனது 10 மாத குழந்தையும் அதில் ஒன்று” என்று கூறினார். மற்றொரு நபர் பேசிய போது “ எங்களை போன்ற ஏழை மக்களுக்கு, இறப்பில் கூட கௌரவம் இல்லை. வீடுகளில் இடப் பற்றாக்குறையால், சமாதிகள் மீது உட்காருவது, நடப்பது போன்ற செய்லகளை செய்கிறோம். இது அவர்களை அவமதிக்கும் செயல்” என்று வேதனை தெரிவித்தார்.

கடந்த 2017-ல் அப்பகுதியில் வசித்த மங்கள் கான் என்ற நபர் இறந்த போது, அவரை புதைக்க இடம் ஒதுக்கும் வரை, உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இடம் ஒதுக்குவதாக அதிகாரிகள் உறுதியளித்த பிறகு, அவர்கள் அருகில் உள்ள குளத்திற்கு அருகில் புதைத்தனர். முஸ்லீம் மக்களுக்கு தேவையான நிலத்தை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை கேட்டதாகவும், ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கிராமத்தின் தலைவர் சுந்தர் குமார் தெரிவித்தார். இது குறித்து பேசிய மாவட்ட மாஜிஸ்திரேட் ரவிகுமார் “ இந்த பிரச்சனை குறித்து என் கவனத்திற்கு வரவில்லை. அந்த கிராமத்திற்கு ஒரு குழுவை அனுப்பி, கல்லறை அமைக்க தேவையான நிலம் குறித்த தகவல்களை பெற்ற பின் நடவடிக்க எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார். 

 

News Counter: 
100
Loading...

Ramya