டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டான #MeVijay ஹாஷ்டாக் : காரணம் என்ன..?

share on:
Classic

கடந்த 24 மணிநேரமாக  #MeVijay என்ற ஹாஷ்டாகை விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கினர். அதற்கு காரணம் என்ன..?

நடிகர் விஜய்க்கு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும அவரை பின்பற்றுபவர்கள் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளனர். திரையரங்குகளின் முன்பு மிகப்பெரிய பேனர்களை வைப்பது, சமூக வலைதளங்களில் வார்த்தை போர்களில் ஈடுபடுவது என மற்ற நடிகர்களின் ரசிகர்களை விட, தாங்கள் எவ்வளவு விசுவாசமாக உள்ளோம் என்பதை நிரூபிக்க அவர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர் தளபதியின் ரசிகர்கள். எனினும் இந்த ஹாஷ்டாக் உருவாக என்ன காரணம் என்று பலரும் குழப்பத்தில் இருந்தனர். ஒரு ரசிகர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பிடித்த நடிகர்கள் குறிப்பிட்டு ஒரு டிவீட் பதிவிட்டிருந்தார். 

அவர் அந்த பதிவில், “ என் குடும்ப உறுப்பினர்களுக்கு பிடித்த நடிகர்கள் :

தாத்தா - சிவாஜி மற்றும் விஜய்
பாட்டி - ஜெமினி கணேசன் மற்றும் விஜய்
அப்பா - விஜய்
அம்மா - விஜய்
அண்ணன் - விஜய்
நான் - விஜய்

விஜய் ரசிகர்கள் உள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததில் மகிழ்ச்சி” என்று அந்த ரசிகர் பதிவிட்டிருந்தார். விரைவில் அந்த டெம்பிளேட் வைரலானது, விஜய் ரசிகர்கள் பலரும் தங்கள் பட்டியலையும் இதே போல் பதிவிட்டனர். இதன் தொடர்ச்சியாக என்ற ஹாஷ்டாக் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

இதே போல் 2 நாட்களுக்கு முன்பு இன்னும் 13 நாட்களில் தளபதி திருவிழா என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
 

News Counter: 
100
Loading...

Ramya