தமிழ் ராக்கர்ஸில் வெளியாகிறது 'விஸ்வாசம்' ..!!

share on:
Classic

'விஸ்வாசம்' படத்தை இணையதளங்களில் வெளியிட, நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் 'தமிழ்ராக்கர்ஸ்' இணையதளம் 'விஸ்வாசம்' படத்தை வெளியிடும் என்ற தகவல் அரசல் புரசலாக வெளியாகியுள்ளது .

ரிலீசாகும் எல்லா படங்களையும் ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவே தங்கள் இணையத்தளத்தில் வெளியிடும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது தமிழ்ராக்கர்ஸ். இதற்கு சினிமா உலகில் கடும் எதிர்ப்பு உள்ள நிலையிலும் புற்றீசல் போல பரவியிருக்கும் அவர்களை யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் இன்று ரிலீசாகியிருக்கும் விஸ்வாசம் படத்தை எங்கு தமிழராக்கர்ஸ் ரிலீஸ் செய்து விடுமோ என்ற பயம் 'தல' ரசிகர்களை பயமுறுத்தி வருகிறது.விஸ்வாசம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்த நேரத்தில் அப்படி வெளியானால் படம் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என்பதே காரணம் .

News Counter: 
100
Loading...

aravind