இலக்கை துரத்தி வெற்றியடையுமா ஆப்கானிஸ்தான்..!

share on:
Classic

ஆப்கானிஸ்தான் அணிக்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பங்களாதேஷ்

உலகக்கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.. பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன்னிலும், தமீம் இக்பால் 36 ரன்னிலும் வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். பின்னர் வந்த ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவர்களை அடுத்து வந்த வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் சேர்த்து பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 83 ரன்களும், ஷாகிப் 51 ரன்களும் குவித்தனர்.

News Counter: 
100
Loading...

Saravanan