10 சதவீத இடஒதுக்கீடு வழக்கு குறித்து மார்ச் 18-ல் முடிவு எடுக்கப்படும் - உச்சநீதிமன்றம்

share on:
Classic

10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு எதிரான மனுக்களை, அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது குறித்து வரும் 28 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க வகையும் சட்டத்தை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு நிறைவேற்றியது. இதை எதிர்த்து காங்கிரஸ் ஆதரவாளர் தெசின் பூனாவாலா மற்றும் பொது நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கின் மீதான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, தற்போதைய சூழலில் இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப முடியாது என்று கூறிய  நீதிபதிகள், இதுகுறித்து வரும் 28 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev