கட்டாய வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் இந்தியா..!

share on:
Classic

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் வென்று, இந்திய அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில், வெலிங்டனில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் தொடரில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2-வது டி-20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பதிலடி தரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

அதேநேரம், சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை இழந்து ஏமாற்றத்தில் உள்ள நியூசிலாந்து அணி, இப்போட்டியில் வென்று டி-20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. மொத்தத்தில், கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்தியாவும், தொடரை வெல்லும் நோக்கில் நியூசிலாந்தும் களமிறங்குவதால் இன்றைய ஆட்டம் ரசிர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind