ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சம்பளம் இல்லாமல் நடிக்கிறார் ரஜினி?...

share on:
Classic

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் நடிக்க உள்ள அடுத்த படத்தில் அவர் சம்பளம் வாங்காமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கலுக்கு வெளியான ரஜினியின் பேட்ட படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படம் தற்போது 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே ரஜினிகாந்த் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற உள்ள தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்தில் தற்போது பிசியாக இருக்கிறார். திருமணம் முடிந்தவுடன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள அடுத்த படத்தில் அவர் முழுமையாக ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள அந்த படத்தில் ரஜினி சம்பளம் இல்லாமல் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. கடந்த ஆண்டு லைகா நிறுவனம் தயாரித்த 2.0 படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யாததே ரஜினியின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 2.0 படத்திற்கு ரூ. 60 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி, அந்த படத்தின் மூலம் லைகா நிறுவனம் பெரிய அளவில் லாபம் அடையாததால் அதனை ஈடுகட்டுவதற்காக அவர் சம்பளம் இல்லாமல் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏ.ஆர். முருகதாஸ் - ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. பெயரிடப்படாத அந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு, ப்ரீ ப்ரொட்க்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

முன்னதாக, தாம் ரஜினியை வைத்து இயக்க உள்ள படம் அரசியல் படம் இல்லை எனவும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தும் விதமான கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

News Counter: 
100
Loading...

Ramya