கலகல பூதமாக 'வில் ஸ்மித்' : வெளியானது அலாதின் டிரைலர்!

share on:
Classic

1992-ம் ஆண்டு ரிலீசாகி வெற்றியடைந்த, தனது 'அலாதின்' படத்தை திரும்பவும் ரீமேக் செய்துள்ளது டிஸ்னி. தற்போது அந்த படத்தின் ஒரு நிமிட டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது. 

கதை என்ன ?
'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற பெயரில் உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியான தமிழ் படம் நம் எல்லாருக்கும் தெரியும். அதே கதை தான் இந்த அப்படத்தின் கதையும். மிகவும் நல்லவனாக வளரும் அலாவுதின் என்ற ஒரு இளைஞனால் மட்டும் தான் அந்த அற்புத விளக்கை எடுக்க முடியும். அதற்காக ஒரு பேண்டஸி குகைக்குள் அழைத்து செயல்படும் அவர் விளக்கை எடுத்தாரா இல்லை கெட்டவர்கள் அதை அபகரித்தார்களா என்பது தான் கதை. கேட்க என்னதான் பழகி போன கதையாக இருந்தாலும், இதை எப்போது படமாக எடுத்தாலும் ஓடும் என்பதற்கு உதாரணம் தான் டிஸ்னியின் இந்த முயற்சி.

 

கலகல பூதம் !

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் 'வில் ஸ்மித்' தான் விளக்கில் இருந்து வெளியே வரும் பூதமாய் கலக்கி இருக்கிறார்.பழைய படத்தில் இருந்த குறைகளை எல்லாம் எந்த படத்தில் நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த படத்தில் அலாவுதின் வேடத்தில் 'மேன மசௌத்' நடிக்கிறார்.அவருடன் மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். வெளியான இந்த படத்தின் ஒரு நிமிட டிரைலரில் அலாவுதினும் அவனது குரங்கும் அந்த விசித்திர குகைக்குள் நுழைகிறார்கள். அற்புத விளக்கை கையில் எடுத்து தேய்க்கும் அவர் முன், வில் ஸ்மித் வந்து நின்று "உங்களுக்கு நான் யார் என்று உண்மையிலேயே தெரியாது. நான் தான் ஜீனி, உங்கள் ஆசைகளை நிறைவேற்ற போகும் பூதம் " என்று கூறுகிறார். அசத்தலான இந்த டிரைலருக்கு பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது என்பது தான் உண்மை.

 

News Counter: 
100
Loading...

priya