அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது..?

share on:
Classic

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை கடந்த ஃபிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தானின் F-16 ரக விமானங்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அப்போது, துணிச்சலாக செயல்பட்ட அபிநந்தன்  F-16 ரக விமானங்களை தடுத்து நிறுத்தினர். 

இதில் அவர் தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். பின்னர் பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட அபிநந்தன், இந்தியாவின் முயற்சியால் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், அபிநந்தனின் வீரதீரச் செயலை பாராட்டும் வகையில், அவருக்கு மிக உயரிய வீர் சக்ரா விருது வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind