100 மணி நேரத்திற்குள் ஜெயிஷ் இ பயங்கரவாதிகள் அகற்றப்பட்டுவிட்டனர் : இந்திய ராணுவம் தகவல்

share on:
Classic

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெயிஷ் இ தீவிரவாதிகள் 100 மணி நேரத்திற்குள்ளாக காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்முகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து அதற்கு காரணமான ஜெயிஷ் இ தீவிரவாதிகள், புல்வாமாவில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று தொடங்கிய துப்பாக்கி சண்டை சுமார் 16 மணி நேரம் நீடித்தது. அந்த சண்டையில் 1 ராணுவ அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக விளங்கிய தீவிரவாதி உட்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து ராணுவம், மத்திய பாதுகாப்பு படை, மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இந்திய ராணுவத்தின் லெப்டினெண்ட் ஜெனரல் கே.ஜெ.எஸ். திலான் “ புல்வாமாவில் தாக்குதல் நடைபெற்று 100 மணி நேரத்திற்குள் ஜெயிஷ் இ தீவிரவாதிகள் அகற்றப்பட்டுவிட்டனர். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் உதவியதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜெயிஷ் இ தீவிரவாத அமைப்புக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கும் தொடர்பு உள்ளது. இவர்களின் தலைமையில் தான், தாக்குதலுக்கு மூளையாக விளங்கிய காம்ரான் வேலை செய்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதை தவிர வேறு வழி இல்லை. துப்பாக்கிச்சூடு நடைபெறும் இடங்களுக்கு அருகில் பொதுமக்கள் வசிக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya