திருமணம் ஆன 24 மணி நேரத்திற்குள் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்த கணவர்..

share on:
Classic

திருமணமாகி 24 மணி நேரத்திற்குள்ளாகவே, தனது மனைவிக்கு முத்தலாக் மூலம் விவகாரத்து வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் ஜஹங்கீர்பாத் பகுதியில் வசிக்கும் ஷாகே ஆலம் என்ற நபருக்கு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. அவருக்கு வரதட்சணையாக மோட்டர் பைக் வழங்குவதாக மணப்பெண்ணின் குடும்பம் தெரிவித்த நிலையில், அவர்கள் பைக்கை வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த மணமகன், திருமணமான அன்றே தனது மனைவியை தலாக் என்று 3 முறை கூறி விவகாரத்து வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மணமகன் குடும்பத்தில் உள்ள 12 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு பதேபூர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை முடிவடைந்த பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முஸ்லீம்களின் பாரம்பரிய முறைப்படி கணவர் தன் மனைவியிடம் 3 முறை தலாக் என்ற சொல்லை உச்சரித்தால், விவாகரத்து ஆகிவிட்டது என்று அர்த்தம். இந்த முத்தலாக் முறை பயனற்ற மற்றும் சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனைத் தொடர்ந்து முத்தலாக் தடை சட்ட மசோதாவை சட்டமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya