சாலை விபத்தில் நூலிழையில் உயிர்தப்பிய பெண்

Classic

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சாலை விபத்தில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர்தப்பிய அதிசயம் நிகழ்ந்தது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஜீப் ஒன்று, அந்தப் பெண்ணை மோதியதுடன், அவரை கடந்து சென்றது. அப்போது அந்த பெண் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். மேலும் அவர் வைத்திருந்த குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது. அப்போது அருகில் இருப்பவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய அந்த நபரைப் பிடித்த பொதுமக்கள், காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News Counter: 
100
Loading...

aravind