டீ மட்டும் தான் உணவு..ஆரோக்கியமாக வாழும் அதிசய பெண்..!

share on:
Classic

சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 ஆண்டுகளாக டீ மட்டும் குடித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார் பில்லி தேவி என்ற பெண்மணி.

11 வயதிலேயே உணவை கைவிட்ட பெண்:

கடுமையான இந்த பனிக்காலத்தில் ஒருவர் டீ மட்டும் குடித்து வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறாதா?. அதுவும் 30 ஆண்டுகளாக டீ மட்டும் குடித்து உயிர் வாழ்கிறார் என்றால்??ஆம் ஒரு அதிசயப் பெண் அப்படி தான் உயிர் வாழ்கிறார். சத்தீஸ்கர் மாநிலம், கோரியே மாவட்டத்தைச் சேர்ந்த பராடியா என்ற கிராமத்தில் வாழ்ந்து வருபவர் பில்லி தேவி. இவர் தனது 11-வது வயதிலேயே உணவை கைவிட்டு டீ-யை மட்டும் குடித்து வாழ்ந்து வருகிறார். உயிரோடு மட்டும் இல்லை, ஆரோக்கியமாகவே இருக்கிறார் பில்லி தேவி. வித்தியாசமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வரும் இவர் அந்த பகுதிகளில் பிரபலமானவராக இருக்கிறார்.
 

 

உணவை கைவிட்டதன் காரணம் தெரியவில்லை:

தற்போது 44 வயதுள்ள பில்லி தேவி 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே உணவை சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாக கூறுகிறார் அவரது தந்தை ரதி ராம்.  தங்களது மகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக கோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்றார். அங்கிருந்து திரும்பி வந்த போது தீடீரென உணவு சாப்பிடுவதையும் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்தி விட்டதாக கூறுகிறார் ரதி ராம். ஆரம்பத்தில் பில்லிதேவி பிஸ்கட் மற்றும் பிரட் ஆகியவற்றுடன் பால் கலந்த டீயை குடித்ததாகவும், பின்னர்படிப்படியாக பிளாக் டீக்கு மாறியதாகவும் கூறுகிறார் தந்தை ரதிராம். ஒரு நாளைக்கு ஒரே ஒரு முறை அதுவும் சூரிய மறைவிற்கு பின் அவர் டீ குடிப்பார் என்றும் கூறினார்.

ஆரோக்கியமாக வாழும் அதிசயப் பெண்:

பலமுறை முறை பில்லிதேவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றதாகவும் ஆனால் அவர் உடம்பில் எந்த நோயும் இல்லை, அவரது இந்த பழக்கத்திற்கு எந்த உடல்நலப் பிரச்சனைகளும் இல்லை எனவும் மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. பல்வேறு மருத்துவமனைகளுக்கு பில்லி தேவியை அழைத்து சென்றதாகவும், ஒரு மருத்துவரால் கூட அவரது இந்த நிலைமைக்கான காரணம் குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர் பில்லி தேவியின் குடும்பத்தினர்.
 

 

மனிதர்களால் இயலாத காரியம் :

டீ-யை மட்டும் குடித்து உயிர் வாழ்வது என்பது மனிதர்களுக்கு சாத்தியமே இல்லாத செயல் என்று கோரியா மாவட்டத்தின் மாவட்ட மருத்துவமனை மருத்துவர் எஸ்.கே.குப்தா தெரிவித்துள்ளார். இது மிக ஆச்சர்யமாக உள்ளது, விஞ்ஞான பூர்வமாக ஒரு மனிதரால் டீ-யை மட்டும் குடித்து 33 ஆண்டுகளாக உயிர் வாழ்வது இயலாத காரியம்” என்று கூறினார் குப்தா. பொதுவாக நவராத்திரி காலங்களில் மக்கள் டீ மட்டும் குடித்து விரதம் இருப்பார்கள், ஆனால் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு 33 வருடங்கள் வாழ்வது அதிசயமாக உள்ளது என்றும் கூறினார் டாக்டர் குப்தா. பில்லிதேவி எப்போதாவது அரிதாக தான் வீட்டை விட்டு வெளியே செல்வார் என்றும், அவர் சிவபெருமானின் தீவிர பக்தர்  என்பதும் குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

youtube