குடிநீர் கோரி பெண்கள் சாலை மறியல்..!!

share on:
Classic

குடிநீர் கேட்டு நாள்தோறும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள களேகவுண்டனூரில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக அங்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என தெரிகிறது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், களேகவுண்டனூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

News Counter: 
100
Loading...

vinoth