உரிமையை நிலை நாட்ட சாலையில் இறங்கிய பெண்கள்

share on:
Classic

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, உலகின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் பிரம்மாண்ட பேரணிகளை நடத்தினர்.

பாலின சமத்துவம், சம வேலைக்கு சம ஊதியம், பெண்கள் மீதான வன்முறைகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உலகின் பல்வேறு பகுதிகளில் நூதன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெற்றன, இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் வீதிகளில் திரண்டு வந்து, தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். ஸ்பெயின், பிரேசில், மெக்சிகோ, துருக்கி, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட பகுதிகளில், கையில் பதாகைகளுடன் ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணி சென்றனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev