வருட கணக்கில் குழந்தையின் ரத்தத்தை எடுத்து கழிவறையில் ஊற்றி வந்த கொடூர தாய் கைது...!!

share on:
Classic

டென்மார்க் நாட்டில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தன் சொந்த மகனின் ரத்தத்தை ஊசிகள் மூலம் வெளியேற்றிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

110 முறை :
36 வயதாகும் அந்த பெண் முறையாக செவிலியர் பயிற்சி பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு சிறு குடலில் பிரச்சனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தையின் உடம்பில் ரத்தம் எப்போதும் குறைவாகவே  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த குழந்தைக்கு இதுவரை 110 முறை ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சந்தேகம் :
காரணமே இல்லாமல் ஏன் ரத்தம் குறைகிறது என்று குழம்பி தவித்த மருத்துவர்களுக்கு அந்த குழந்தையின் தாய் மீது சந்தேகம் எழுந்தது. அவரை பிடித்து விசாரித்த போது தான் அந்த அதிர்ச்சிகர உண்மை வெளிவந்துள்ளது. ஆம் 11 மாதத்தில் இருந்தே அந்த குழந்தையின் உடலில் இருந்து ஊசிகள் மூலம் ரத்தம் எடுக்க ஆரம்பித்துள்ளார் அந்த கொடூர பெண். வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் குழந்தையின் உடலில் இருந்து ரத்தம் எடுத்துவிடுவாராம். முதலில் குறைவாக இருந்த அளவு பின் நாட்களில் அரை லிட்டர் என்று ஆகியது தான் அதிர்ச்சி தகவல். 

"கழிவரையில் ஊற்றினேன்"
கைது செய்யப்பட்ட அந்த பெண் கூறும்போது " நான் தெரிந்தே இதை செய்யவில்லை. இப்படி செய்ய எப்போதிலிருந்து ஆரம்பித்தேன் என்று கூட எனக்கு தெரியாது. இதை செய்ய கூடாது என்று எனக்கு தெரியும் தான் ஆனாலும்  அப்படி செய்வது எனக்கு பழக்கமாகி விட்டது. அந்த ரத்தை எடுத்து பின் கழிவறையில் ஊற்றி, ஊசிகளை குப்பையில் வீசிவிடுவேன்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கைது செய்யும் போது கூட அந்த பெண்ணின் கையில் ஒரு பை நிறைய ரத்தம் இருந்துள்ளது.

மனநோய் :
சமூக வலைத்தலங்களில், உடல் நலம் பாதித்த குழந்தையை வைத்து கொண்டு கஷ்டப்படும் ஒரு பெண்ணாக காண்பித்து கொண்டுள்ளார் அந்த பெண். ஆனால் நிஜவாழ்வில் தன் சொந்த குழந்தையின் ரத்தத்தை குடிக்கும் ரத்த காட்டேரியாக இருந்துள்ளார். அவரை பரிசோதித்த மனநல மருத்துவர்கள் அவருக்கு 'Munchausen syndrome' என்ற வியாதி இருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர். இந்த வியாதி பெரும்பாலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடைய தாய்மார்களுக்கு ஏற்படுமாம். குழந்தையின் வியாதியை நீக்க தாங்களே ஏதாவது நினைத்து கொண்டு வைத்தியம் செய்வது தான் அந்த மனநோயின் இயல்பு. ஆனாலும் கொடுமையான இந்த குற்றத்திற்க்கு அவர் சிறைக்கு செல்ல தகுதியானவர் என்று கூறி அவரை சிறையில் அடைத்துள்ளது நீதிமன்றம். தற்போது 7 வயதாகும் அந்த குழந்தை இனி தன் தந்தையின் பாதுகாப்பில் வளரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

priya