"இந்தியாவை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன்" - மோடி

share on:
Classic

இந்தியாவை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு தனியாக பிரதமர் வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், "அப்துல்லா, முஃப்தி குடும்பத்தினரால், ஜம்மு-காஷ்மீர் 3 தலைமுறைகளாக சீரழிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். மாநிலத்தின் சிறந்த எதிர்காலத்துக்காக அவர்களை தேர்தலில் தோற்கடிப்பது அவசியம் என குறிப்பிட்டார். "தன்னை விருப்பம் போல அவர்கள் விமர்சிக்கலாம்" என்றும், "நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்கமாட்டேன்" என்றும் மோடி தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan