சார்லி சாப்ளினுக்கு 129வது பிறந்த நாள்

Classic

நாடகங்கள் சினிமாவாக உருவெடுக்க தொடங்கிய  காலத்தில் இருந்து உலகமுழுவதும் மிக பெரிய அளவில் நகைசுவை சூப்பர் ஸ்டாராக இருந்தவர் சார்லி சாப்ளின் . நடிகர்,இயக்குனர், இசையமைப்பாளர் என்று பன்முக கலைஞராக இருந்த சார்லி சாப்ளினுக்கு இன்று 129வது பிறந்த நாள்.

திரைத்துறையில் பல சூப்பர் ஸ்டார் வந்தாலும், அனைவருக்கும் முன்னோடி சார்லி சாப்ளின் எனக் கூறலாம். இவர்  லண்டனில் உள்ள வால்வோர்த்தில் 1889ம் ஆண்டு  பிறந்தார். இவரது பெற்றோர் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அம்மாவின் கண்காணிப்பில் வளர்ந்து வந்தார்.பிறகு குடும்ப வறுமையின் காரணமாக ஒரு காப்பகத்தில் வளர்ந்தார்.

சாப்ளினுக்கு 12 வயதில் தந்தை உடல் நல குறைவால்  உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது தாயும் மனநலம் பாதிக்கப்பட்டு 1928ம் ஆண்டு உயிரிழந்தார். சாப்ளின் சிறு வயதில் இருந்தே அம்மாவுடன் நாடகத்தில்  நடித்து வந்தார், அதன்பின்னர் நாடகம் நடிப்பதற்காக லண்டனில் இருந்து அமெரிக்க  சென்றார்.  அங்கு தயாரிப்பாளர் மாக் செனட், சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டார்.

1927ம் ஆண்டு முதல் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியது, ஆனால் சாப்ளின் இதில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
 1928ஆம் ஆண்டுத்  "தி சர்க்கஸ்" படத்தின் டைட்டில்  இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது.
இவரது முதல் பேசும் படமாக 1940ம் ஆண்டு  "தி கிரேட் டிக்டேடர்"  வெளியானது.  ஹிட்லரையும் அவரது  கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு  ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இதில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார் . 

இவர் சிறந்த நடிகர், இயக்குனர், திரைக்கதை, இசையமைப்பாளர்கென்று  பல விருதுகளை பெற்றுள்ளார், இரண்டு முறை ஆஸ்கார் விருதும்  பெற்றுள்ளார். 

1977ம் ஆண்டு  கிறிஸ்மஸ் தினத்தன்று சாப்ளின் உயிரிழந்தார்.இவரது மறைவு திரையுலகம் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் இழப்பாக இருந்தது. இவர் நடித்த பேசும் படத்தை விட பேசாத படம் தான் மிக பெரிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளது. இவரது படங்களுக்கு இன்றும் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். 

News Point One: 
 லண்டனில் உள்ள வால்வோர்த்தில் 1889ம் ஆண்டு  பிறந்தார்
News Point Two: 
இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்றுள்ளார்
News Point Three: 
1977ம் ஆண்டு  கிறிஸ்மஸ் தினத்தன்று சாப்ளின் உயிரிழந்தார்
News Counter: 
200

Parkavi