குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனை.., தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவு...

share on:
Classic

பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவ் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் கடந்த 2016-ஆம் ஆண்டு ஈரானுக்கு சென்ற போது, பாகிஸ்தான் ராணுவத்தால் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது பாகிஸ்தான் நாட்டை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இதனிடையே தற்போது, பாகிஸ்தான் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது, குல்பூஷன் ஜாதவை தூக்கிலிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan