உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்திய அணி இன்று அறிவிப்பு..!

share on:
Classic

12 ஆவது உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று மும்பையில் நடைபெறுகிறது. அதன்பின் உலக கோப்பை தொடரில் இடம்பெறும் இந்திய அணிக்கான வீரர்களை அறிவிக்கப்பட உள்ளனர்

இதில், 2-வது விக்கெட் கீப்பராக ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக் போட்டியில் உள்ளனர். அதேபோல் நான்காம் நிலை பேட்ஸ்மேன்களுக்கான போட்டியில் அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர். 

நான்காம் நிலை வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் உமேஷ் யாதவ், கலீம் அகமது, இஷாந்த் சர்மா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. 

இந்த அணியில் நான்காம் நிலை பேட்ஸ் மேன்கள், பவுளர்களின் இடத்தில் பல்வேறு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த வீரர்களில் தேர்வுக் குழுவினர் யாரை தேர்வு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan