உலகக்கோப்பை ஹாக்கி தொடர்: இந்தியா - பெல்ஜியம் அணிகளுக்கிடையேயான போட்டி சமன்

share on:
Classic

உலககோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது. 

14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் 8-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடியும் வரை இரு அணிகளும் கோல் போடாததால் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இந்தியாவின் ஹர்மன்பிரித் சிங் 39வது நிமிடத்திலும், சிம்ரன் ஜித் சிங் 47வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். இறுதியில், இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2 - 2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

News Counter: 
100
Loading...

sasikanth