உலகக்கோப்பை : தன் காலே தனக்கு எதிரி..! ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய மார்ட்டின் குப்டில்..!

share on:
Classic

நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டாகி வெளியேறினார் குப்டில்..! இது ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வாகும்.

12-வது உலகக்கோப்பை தொடரின் 25-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் சேரத்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது.

243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் குப்டில், மன்ரோ களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முன்ரோ ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வில்லியம்சனுடன் இணைந்து குப்டில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் 14-வது ஓவரை வீச வந்தார் பிளக்வாயோ. அவர் வீசிய 5-வது பந்தை எதிர்கொண்ட குப்டில் பந்தை அடித்து ஆட முயற்சிக்க அது மிட்-ஆன் மற்றும் மிட் விக்கெட்டு திசையில் சென்றது. அப்போது ரன் எடுக்க முயற்சித்த குப்டில் தடுமாறி தனது காலால் ஸ்டம்புகளை தட்டிவிட்டார். இந்நிலையில், பெயில்ஸ் கீழே விழுந்ததால் ஹிட் விக்கெட் முறையில் அவுட் கொடுக்கப்பட்டு அவர் வெளியேறினார்.

News Counter: 
100
Loading...

Saravanan