ஹிட்லர்கள், முசோலினிகள், மோடிகள் போன்ற தலைவர்கள் உலகத்திற்கு தேவையில்லை - திக்விஜய் சிங்

share on:
Classic

ஹிட்லர், முசோலினி, பிரதமர் நரேந்திர மோடி போன்ற சர்வாதிகாரிகள் உலகத்திற்கு தேவையில்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரக்கமும், அமைதியும் தான் நமக்கு தேவை, தீவிரவாதம் தேவையில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்வஜய் சிங், ராகுல் காந்தியின் கருத்தை மேற்கோள் காட்டி டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் “ ராகுல் ஜி யின் கருத்தை நான் முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன். கவுதம புத்தர், மகாவீரர் போன்றோரால் வலியுறுத்தப்பட்ட அமைதி மற்றும் இரக்கம் தான் உலகிற்கு தேவை. வெறுப்பு மற்றும் வன்முறை தேவையில்லை. மகாத்மா காந்தி மற்றும் மார்டின் லூதர் கிங் போன்றோர்கள் தான் உலகத்திற்கு தேவை. மாறாக ஹிட்லர்கள், முசோலினிகள் மற்றும் மோடிகள் உலகத்திற்கு தேவையில்லை” என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya